search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி விபத்து"

    மதுரையில் இன்று காலை இட்லி கடைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    மதுரை மதிச்சியம் ராம ராயர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மனைவி சந்தானம் அம்மாள் (வயது 65). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டின் தெருமுனையில் இட்லி கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் கடையில் சந்தானம் அம்மாள் வியாபாரம் செய்து வந்தார். கடை முன்பு நின்றிருந்த ஒரு கார் பின்நோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் இட்லி கடைக்குள் புகுந்தது. இதில் உள்ளே இருந்த சந்தானம் அம்மாள் கார் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தானம் அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செனாய் நகர் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பேச்சாளர் வைகை மூர்த்தி என்பவரின் பேரன் வெங்கடேசன் (18) என்பவர் புதிதாக கார் பழகி வந்துள்ளார். இவர் காரை பின்நோக்கி இயக்கியதில் விபத்து ஏற்பட்டு சந்தானம் அம்மாள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    கரூர் அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய முதல் மனைவி கிரேசி ஜெயலட்சுமி (55), 2-வது மனைவி சுப்புலட்சுமி (53), டிரைவர் முனியாண்டி (65). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    கரூர் அருகே சின்னதாராபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் செல்வராஜூம், முனியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிய கிரேசி ஜெயலட்சுமியையும், சுப்புலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பலியான செல்வராஜ் கிராமப்புற வளர்ச்சி துறை இணை இயக்குனராகவும், முனியாண்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×